tamilnadu

பரமத்தியில் மறைமுகத் தேர்தல் தள்ளிவைப்பு

நாமக்கல், ஜன.11- பரமத்தி ஒன்றியத்தில் மறைமுகத் தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட் சித் தலைவர், ஒரு துணைத்தலைவர், 172 ஒன்றியத் தலைவர்கள், 172 ஒன்றியத் துணைத்தலைவர், 322 ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பரமத்தி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தவிர மொத்தம் 666 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் சனியன்று நடைபெற்றது. ஏற்கனவே தேர்ந்தெடுப் கப்பட்ட உறுப்பினர் புதிய தலைவர்களை தேர்ந் தெடுத்தனர். பரமத்தி ஒன்றியத்தில் மொத்தம் எட்டு வார்டுகளில் அதிமுக 4, திமுக 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால், தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கு பதிவில் அதி முக உறுப்பினர் யாரும் பங்கேற்கவில்லை. இத னால் மறைமுக வாக்கெடுப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், நாமக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக் கான மறைமுகத் தேர்தல் நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊராட் சித் தலைவராக 12-ஆவது வார்டு உறுப்பினர் ஆர். சாரதா (அதிமுக) தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய் ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா. மெகராஜ் அறிவித்தார். ஏற்கனவே, இந்த மாவட்ட ஊராட்சியில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் 4 பேர் வருகை தரவில்லை. இதேபோல் ஒன்றியத் தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்க ளிலும், கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் நடை பெற்றன. இந்த பதவிகளுக்கு போட்டி இல்லாத இடங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டி இருந்த இடங்களில் மறைமுக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உடனடியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் முடிவுகள்


*அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்* 
1. கொல்லிமலை - மாதேஸ்வரி, 2. புதுச்சத்திரம்- சாந்தி,3.நாமகிரிப்பேட்டை -ராஜேந்திரன், 4. பள்ளிபாளையம்- தனலட்சுமி, 5.எருமப்பட்டி- வரதராஜன், 6.எலச்சிபாளையம்- ஜெயசுதா, 7. வெண்ணந்தூர்- தங்கம்மாள்,  8. நாமக்கல் -சுமதி, 9. கபிலர்மலை -ரவி, 10.மோகனூர்- சரஸ்வதி.
*திமுக வெற்றிபெற்ற இடங்கள்*  
1.சேந்தமங்கலம் -  மணிமாலா, 2.இராசிபுரம்- ஜெகநாதன், 3.திருசெங்கோடு -சுஜாதா.
  மல்லசமுத்திரத்தில்  அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் அலமேலு வெற்றி பெற்றார்.

;