tamilnadu

img

வெண்மணி தியாகிகள் 52ஆம் ஆண்டு நினைவு தினம்..... கீழவெண்மணியில் இன்று கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றுகிறார்....

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியில் டிசம்பர் 25 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெண்மணி தியாகிகள் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி தலைமை வகிக்கிறார்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றுகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, வி.ச.மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமிசிபிஐ மாநில  நிர்வாகக்குழுஉறுப்பினர் எம்.செல்வராசு எம்.பி., சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து,ஐ.வி.நாகராஜன், வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், சிபிஐநாகை மாவட்டச்செயலாளர் எஸ்.சம்பந்தம், சிபிஎம் மயிலாடுதுறைமாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் நாகை மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், வெகுஜன இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். சிபிஎம்கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் நன்றி கூறுகிறார்.