tamilnadu

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவன் மர்ம மரணம்

ஆரணி, ஜன.9- ஆரணி அருகே உள்ள முள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் அரசு போக்குவரத்து ஓட்டுநர். இவரது மகன் கோகுல் (14)  மாற்றுதிறனாளியான இவர் அங்குள்ள தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளி யில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதனன்று பள்ளியில் இருந்த கோகுலுக்கு உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் மாணவனை ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற னர். ஆனால் மாணவன் கோகுல் இறந்துவிட்டார்.  இது பற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த தயாளன் மகன் இறந்ததை கண்டு கதறிஅழுதார். இது குறித்து பெற்றோர் கள் பள்ளித் தரப்பில் கேட்ட தற்கு சரிவர பதிலளிக்க வில்லை எனக் கூறுகின்றனர். இதனால் ஆரணி நகர காவல்நிலையத்தில்  தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாகக கூறி புகார் அளித்தனர்.  இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.