tamilnadu

மதுபோதையில் இளைஞர்கள் வெறியாட்டம் - கைது

அவிநாசி, அக். 31- அவிநாசியில் மது போதையில் தகரா றில் ஈடுபட்டதை தட்டிகேட்டவர்களை தாக்கிய இளைஞர்களை காவல்துறையி னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி யில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத் தில் புதனன்று திருமண நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் கலந்து கொண்ட நான்கு இளை ஞர்கள்  மது அருந்திவிட்டு காலி மது பாட் டிலை மண்டபத்தின் மாடியிலிருந்து. கீழே நடந்து செல்வோர் மீது வீசி எறிந்துள்ள னர். இதனைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ரமேஷ், ராஜேந்திரன், மாரிமுத்து ஆகியோர் மது போதையில் இருந்த இளைஞர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள்  தகாத வார்த் தையில் பேசி திடீரென ராஜேந்திரனை மரக் கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் அருகி லிருந்த ரமேஷ், மாரிமுத்தையும் தாக்கத் தொடங்கியுள்ளனர்.  இதில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். இதன்பின்னர் மண்டபத்தின் முன்பு அப்பகுதி பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, மது போதையில் தகராறில் ஈடுபட்டவர் களை கைது செய்யக்கோரி வலியுறுத்தினர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது போதையில் தாக்குதல் நடத்திய இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.  இதன்பின்னர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செய லாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ஜீவானந்தம், வெங்கடேசன், அரவிந்த் குமார், கிருஸ்டோபர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.