tamilnadu

img

பொருளாதார சீரழிவை திசை திருப்ப மதவெறி திட்டம் திருப்பூரில் கி.வீரமணி சாடல்

திருப்பூர், ஜன. 11 – மத்திய பாரதிய ஜனதா அரசு பொரு ளாதார சீரழிவைத் திசை திருப்புவதற்காக மத அடிப்படையிலான திட்டங்களைத் திணித்துக் கொண்டிருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் எம்.பி. கே.சுப்பரா யனுக்கு பாராட்டு விழா மற்றும் விடுதலை நாளிதழ் சந்தா வழங்கும் விழா ராயபுரம் பூங்கா அருகே வியாழனன்று மாலை தி.க. மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச் சாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ் வில் தி.க தலைவர் கி.வீரமணி, கே.சுப்பரா யன், தி.க.துணைத் தலைவர் கலி பூங்குன் றன், திமுக மாவட்டச் செயலாளர் பா.செல் வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்வில் கி.வீரமணி பேசியதா வது: நாட்டில் தற்போது நாம் எத்தகைய கொடுமையான சூழலில் உள்ளோம். குஜராத் மாடல் என்று சொல்லி ஆட் சிக்கு வந்த பாஜக மக்களை ஏமாற்றி விட்டார்கள். பொருளாதார வளர்ச்சி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தெற்காசிய பொருளாதாரத்தில் இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. தனியார்மயம் என அம்பானி அதானிக்கு ஆதரவாக ஆட்சி யாளர்கள் செயல்படுகின்றனர். 150 ரயில் களைத் தனியார்மயமாக்கப் போவதாக சொல்கிறார்கள். முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால் இப்பிரச்சனைகளை விட்டுவிட்டு துணிந்து பொய் சொல்கிறார்கள். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை நவீன மனுதர்மமாக இருக்கிறது. மக்களை நாங்கள் பிரிக்க வில்லை. பாஜக ஆட்சியாளர்கள்தான் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மதம், சாதி, வர்ணசிரம தர்மம் மக்களை ஒன்று படுத்தவில்லை. இவர்கள் பொருளாதார சீரழிவை திசை திருப்புகின்றனர். தமிழகத்தில் அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ளவர்கள், மத்தியில் ஆளுவோர் சொல்வதைக் கேட்கும் கொள்கையுடன் உள்ளனர். மத்திய அரசால் நிறைவேற் றப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு அதிமுக, பாமக போன்ற கட்சிகள் ஆதரவாக வாக்க ளிக்காமல் விட்டிருந்தால், அந்த சட்டம் நிறைவேறி இருக்குமா? இந்தியாவில் இத் தகைய நிலை  ஏற்பட்டிருக்குமா? மாணவர் கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப் பார்களா? இவை ஒருபுறமிருக்க நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள் ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனி யார்மயமாக்கி வருகின்றனர். இதன் மூல மாக நாட்டின் அடிப்படை தகர்க்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் லாபம் தரும் நிறுவனங்களை விற்க முயற்சிக்கின்றனர். அதோடு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. முன்னதாக இக்கூட்டத்தில் கலி பூங்குன் றன் பேசுகையில் கூறியதாவது: உலகி லேயே 86 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் பகுத்தறிவு நாத்திக இதழ் விடுதலை நாளிதழ் மட்டுமே. சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிக்கும் விடு தலை உணர்வு ஊட்டக் கூடியதாக இந்த இதழ் இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் பாராட்டு விழாவை ஏற்க மாட்டார்கள். ஆனால் இந்த பாராட்டு விழா சுப்பராயனை தேர்வு செய்த மக்களுக்கானது.  மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சமூக நீதிக்கு எதிர்ப்பான அறைகூவல் விடப் பட்டுள்ளது, மதச்சார்பின்மைக்கு எதி ரான சூழல் ஏற்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டிலேயே வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் வெளியேறிய பிறகு டெமாக்ரசி எனும் ஜனநாயகம் இருக்காது, பிராமனோகிரேஷி எனும் உயர்சாதியினர் ஆதிக்கம் தான் இருக்கும் என்று சொன்னவர் பெரியார். ஆங்கில மொழிக்கு அகராதியில் பிராமினோகிரேஷி எனும் வார்த்தையைக் கொடுத்தவர் பெரியார்.   மத்திய அரசில் 58 அமைச்சர்களில் 32 பேர் பிராமணர்கள், 13 பேர் பிற்படுத் தப்பட்டோர், 6 பேர் தாழ்த்தப்பட்டோர், 4 பேர் பழங்குடியினர், ஒருவர் இஸ்லாமியர். அரசு உயரதிகாரிகளில் 232 பேர் உயர் சாதியினர், 120 பேர் பிற்படுத்தப்பட்டோர், 86 பேர் தாழ்த்தப்பட்டோர், 52 பேர் பழங்குடியினர், 52 பேர் சிறுபான்மையினர். அதாவது மொத்தத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்சாதியினர் உள்ளனர். அதேபோல் 2015 – 2017இல் நீட் தேர்வு இல்லாதபோது தமிழ்வழியில் படித்தோர் 510 பேர் மருத்துவராக முடிந் தது. நீட் தேர்வுக்கு பிறகு தமிழ் வழியில் படித்தோர் 52 பேர் மட்டுமே தேறியுள்ளனர். அதேபோல் அரசுப் பள்ளிகளில் படித்தோர் அப்போது 52 பேர் மருத்துவப் படிப்புக்கு போனார்கள். ஆனால் நீட் தேர்வுக்குப் பிறகு 5 பேர்தான் மருத்துவப் படிப்புக்கு போக முடிந்தது. அதேபோல் அப்போது, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 3546 பேர் மருத்துவப் படிப்புக்குப் போனார்கள். நீட் தேர்வுக்குப் பிறகு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 2314 பேர் மட்டுமே மருத்துவப் படிப்புக்குப் போயுள்ளனர். அதாவது  1232 பேர் வாய்ப்பு  பறிபோயுள்ளது. ஆனால் முன்பு மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 62 பேர் மருத்துவப் படிப்புக்கு போனார்கள். ஆனால் நீட் தேர்வுக்குப் பிறகு அது 1220 பேராக 20 மடங்கு அதிகரித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அல்தமாஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு நீட் தேர்வு செல்லாது என்று தீர்ப்பளித்தனர். ஆனால் அதில் எதிர்த்து தீர்ப்பளித்த ஒரு நீதிபதி ஏ.ஆர்.தவே. நீதிபதி அல்தமாஸ் கபீர் பதவி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் மறு சீராய்வு மனுவை பாஜக அரசு தாக்கல் செய்தபோது, முன் னெப்போதும் இல்லாத நடைமுறையாக பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிராக இருந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் மீண்டும் விசாரித்து நீட் தேர்வு செல்லும் என தீர்ப் பளித்தனர். எனவே இந்த வரலாற்றை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறு பான்மை மற்றும் பழங் குடி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

;