tamilnadu

திருப்பூரில் கொரோனா பரவல் குறித்து உண்மை நிலையை வெளியிடு - வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 5- திருப்பூரில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறித்து உண்மை நிலையை வெளியிடு மாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட நிர்வாகத்தை வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டத் தலைவர் ப.ஞான சேகரன், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் ஆகியோர் சனி யன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு துவங்கி, 5 ஆவது கட்டமாக இன்று வரை திருப்பூர் மாவட்டம் ஊரடங்கை சந் தித்து வருகின்றது. முழு ஊர டங்கு அமலில் இருந்தபோது தொடக்கத்தில் மக்கள் அச்சத்தில் சிக்கித் தவித்தனர். அப்போது, மக் களைப் பாதுகாத்திட அவர்களுக் குத் தேவையான உதவிகள் கிடைத்திட, வாலிபர் சங்கம் மூலம் அரசு வழிகாட்டிய தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பல்வேறு மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  குறிப்பாக, கிருமி நாசினி தெளிப்பது, கபசுரக் குடிநீர் வழங் குவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கொரோனா அச்சம் தவிர்க்கும் வகையில் விழிப் புணர்வுத் துண்டு பிரசுரம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கி யது, உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்கியது உள்ளிட்ட பணிக ளைச் செய்ததுடன், வாலிபர் சங்க ஊழியர்கள் துணிவுடன் முன்வந்து இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை களுக்கு 270 யூனிட் ரத்த தானம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊரில் தேங்கும் குப் பைகளை அகற்றுவது, சாக்கடைக் கழிவுநீர் தேங்காமல் சுத்தம் செய் வது, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக் தியை அதிகப்படுத்த கபசுரக் குடி நீர் வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது என மக்களுக்குத் தேவையான பணிகளை வாலி பர் சங்கத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.  

முதல் மற்றும் இரண்டாவது ஊரடங்கில் கொரோனா தொற்று அதிகமாக பரவிய மாவட்ட மாக திருப்பூர் இருந்தது. மருத்து வத் துறையினர், தூய்மைப் பணி யாளர்கள், காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமை யில் மாவட்ட நிர்வாகத்தின் துரித செயல்பாட்டால் கொரோனா பர வல் விரைவில் கட்டுக்குள் வந்து, பரவல் தடுக்கப்பட்ட மாவட்ட மாக மாறி மக்களுக்கு நிம்மதியை அளித்தது. ஆனால் தற்போது மீண்டும் பர வல் துவங்கியுள்ளது கவலை ஏற்ப டுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தற்போது எடுக்கும் நட வடிக்கைகள் வெளிப்படைத் தன் மையுடன் இல்லை என திருப்பூர் மக்களுக்கு பலமான சந்தேகம் உரு வாகியுள்ளது. தினந்தோறும் மாநி லம் முழுவதும் தொற்று எண் ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நமது மாவட் டத்திலும் தொற்று எண்ணிக்கை, மாவட்ட ஆட்சியர் சொல்கிறபடி மொத்த வழக்குகள் வெள்ளி வரை 194 ஆக அதிகரித்துள்ளது. தனி மைப்படுத்துதல் 3500 க்கும் அதிக மாக உள்ளது. மேலும் மாதிரிகள் எடுத்தது 761 என்ற எண்ணிக்கை யில் உள்ளது. எனினும் மாநகரில் தனிமனித விலகல் குறைந்து இயல்பாக அனைத்துப் பணிகளும் நடை பெற்று வருகிறது. பொது இடங்க ளில் கட்டுப்பாடின்றி அதிக எண் ணிக்கையில் கூடுவது ஒருபுறம் நோய்ப்பரவலை அதிகப்படுத்தி வருகின்றது. அரசு சொன்னது போல் கொரோனாவோடு வாழ மக்கள் பழகி விட்டார்கள். எனி னும் விரைந்து பரவும் நோய்த் தொற்றுக்கு இது சரியான தீர்வா காது. மாவட்ட ஆட்சியர் நோய் வந் தால் சிகிச்சையளிக்க ஏற்பாடுக ளைச் செய்து வருவதற்கு பாராட்டுகளைத் தெரிவிக்கி றோம். எனினும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முகக் கவசம் அணியாதவர்கள் மீது நடவ டிக்கை, இரவு பத்து மணிக்கு மேல் வேலைக்குச் சென்று வருபவர்கள் மீது நடவடிக்கை, வாகனத் தணிக்கை என்ற அளவில் மட் டுமே காவல் துறை மூலம் செயல்ப டுவது போதுமானதல்ல.

இதனு டன் இணைந்து அனைத்து பகு திகளிலும் தீவிர மருத்துவப் பரி சோதனை முழுமையாகச் செய்திட வேண்டும். பருவநிலை மாற்றத் தால் வெயில் காலம் மாறி, மழைக் காலம் துவங்கியுள்ளது. சளி, காய்ச்சல் கூடுதலாக மக்களிடம் பரவும் வாய்ப்புள்ளது. சாதாரண காய்ச்சலுக்கும், வைரஸ் காய்ச்ச லுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். எனவே அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முறையாக அமல்ப டுத்தி, தனிமனித விலகலை சரியா கப் பின்பற்றி மக்கள் தமது பணி களையும், அன்றாட நடவடிக்கை களையும் தொடர வழி செய்ய வேண்டும். அதற்குக் கொரோனா பரவல் குறித்து வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவித்து, அவர் கள் அச்சத்தில் இருந்து விடுபட வும், அவர்களுக்கு நோய்த் தொற்று பாதிக்காமல் பாதுகாக்க வும் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர் சங்கம் கேட்டுக் கொண் டுள்ளது.

;