districts

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 6 - 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் கருணைத் தொகை ரூ.500 ஓராண்டு கடந்த பின்னும் வழங்காததைக் கண்டித்து திருப்பூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கடந்த ஆண்டு அறிவித்த பொங்கல் கருணைத் தொகை ரூ.500 வழங்கிட வேண்டும். அவிநாசி, குண்டடம், ஊத்துக் குளி வட்டாரங்களில் ஓய்வுபெற்ற ஊழி யர்களுக்கு மூன்றாண்டுகளாக வழங்காத பணிக்கொடை, எஸ்பிஎப், ஜிபிஎப் பணப் பலன்களை உடனே வழங்கிட வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை  ஓய்வூதியம் வழங்குவதை அரசாணைப்படி மாதந்தோறும் முதல் தேதியில் வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக செவ்வாயன்று தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதி யர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கே.முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார்.கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகி கே.பால்ராஜ் பேசினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் டி.குமார் வாழ்த்தி உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பாக்கியம் நிறை வுரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் சுசீலா நன்றி கூறினார்.