நீட் தேர்வில் தோல்வி தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம் சிக்கியது
திருநெல்வேலி, ஆக. 4- நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்பு ரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (48) மகள் தனலட்சுமி (18). இவர் பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் படிக்க ‘நீட் தேர்வு’ எழுதியிருந்தார். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டார். மேலும் அவரை மேற்படிப்பு படிக்க எந்த கல்லூரியிலும் சேர்க்காமல் வீட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி தனலட்சுமி 2 நாட்களுக்கு முன் பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு திரும்பிய அவரது தாயாரும், உறவினர்களும் மாணவி தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்து அழுதனர். சம்பவ இட த்துக்கு தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தன லட்சுமி உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மரு த்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போனது மிகவும் வருத்த மளிக்கிறது. நான் வெற்றி பெற்று டாக்டராகி இருந்தால் எனது மதிப்பு வேறு மாதிரி ஆகி இருக்கும். இப்போது வீட்டில் அடைபட்டு கிடக்கிறேன். என் தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.மேலும் குடும்பத்தினர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலப்பாளையம் சேவை முகாம் ஒத்திவைப்பு
திருநெல்வேலி, ஆக. 4- மேலப்பாளையம் மண்டலத்தில் ஆக.5-ஆம் தேதி நடை பெறவிருந்த சிறப்பு சேவை முகாம் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணை யர் விஜயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது, திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளை யம் மண்டலத்தில் ஆக.5-ஆம் தேதி சிறப்பு சேவை முகாம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த முகாம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 8-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு சேவை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பச்சிளங்குழந்தை மர்ம மரணம்
தூத்துக்குடி, ஆக. 4 தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்த வர் பழனி முருகன். இவரது மகள் ஜாய்ஸ்ரீ. பிறந்து 83 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தி னால் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர், குழந்தைக்கு காய்ச்சல் இருப்பதாக மாத்திரையை கொடுத்தாராம் . ஆனால் மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை நிலைமை திடீ ரென மோசமானது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு ஜாய்ஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். குழ ந்தையின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் தற்கொலை
தூத்துக்குடி, ஆக. 4 தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே தேமா ங்குளம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த ராஜ். விவசாயி. இவரது மனைவி பார்வதி. இவர் செய்துங்க நல்லூர் அருகே தூதுகுழியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மனோகரன் (20) என்ற மகன் மற்றும் 2 மகள்கள். மனோ கரன் நாசரேத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடைய தாயாருக்கு உதவியாக தோட்ட த்துக்கு சென்று வேலை செய்வது வழக்கம். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று தோட்டத்து க்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்த னர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் செய்துங்க நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை:வாலிபர் கைது
தூத்துக்குடி, ஆக. 4 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிள்ளையாளான்விளை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சுடலை க்குட்டி (20) இவர் அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவரது காதலை அந்த மாணவி ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதை யடுத்து அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கல்லுாரி மாணவி தனது தாயாரிடம் கூறினாராம். உடனே பெண்ணின் தாயார் நாச ரேத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சுடலைக்குட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
தூத்துக்குடி, ஆக. 4 தூத்துக்குடி அருகே வேலாயுதபுரத்தைச் சேர்ந்த வர் சின்னையா மகன் வேலுச்சாமி (59). இவர் புதூர்பாண்டிய புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வந்தார். சனியன்று வேலைமுடிந்து தூத்து க்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி இறந்தார். விபத்து குறித்து ஓட்டப்படாரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.