வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

img

செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக கொள்ளிடத்தில் வாக்குச் சேகரிப்பு

சீர்காழி, ஏப்.16-நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி ரயில்வே ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு, கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்லசேதுரவிக் குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரித்தனர். மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், நகரச் செயலாளர் அமிர்தரவி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், பானுசேகர் மற்றும் கூட்டணி கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதே போல் கொள்ளிடம்அருகே புத்தூர் கடைவீதியில் ராமலிங்கத்தை ஆதரித்துவாக்குக் கேட்டு மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். எனவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். மூமுக மாவட்ட செயலாளர் முனிபாலன், ஒன்றியச் செயலாளர் பாரதிதாசன், திமுக ஒன்றியச் செயலாளர் செல்லசேது ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

;