கும்பகோணம், ஏப்.7-மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியான தாராசுரம் பகுதியிலிருந்து வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அவருக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேற்குஒன்றிய பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சிபிஎம், சிபிஐ, இந்திய தேசியகாங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்ற கழகம் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தோழமை கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.மேலும் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி களம்புரம் ஊராட்சி குடியான தெருவில் வசித்து வரும் பாலசுப்ரமணியன் வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்துநாசமானது. வீட்டு பொருட்கள் அனைத்தும்தீயில் எரிந்தன. இதையறிந்த வேட்பாளர்ராமலிங்கம், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சென்றுவிவசாயி பாலசுப்ரமணியன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.