tamilnadu

img

திருவிடைமருதூரில் செ.ராமலிங்கம் வாக்குச் சேகரிப்பு

கும்பகோணம், ஏப்.11-மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் மலையப்ப நல்லூர் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராமலிங்கம், தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்துள்ளேன். ஆகையால் என்னை தேர்வு செய்தால் மக்களாகிய உங்கள் குரலாய் தில்லியில் ஒலிப்பேன். மேலும் விவசாயிகளின் வாழ்வு மேம்பட பாடுபடுவேன் என்றார். திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், தெற்குஒன்றிய திமுக செயலாளர் அம்பிகாபதி, அவைத் தலைவர் இரா.நெடுஞ்செழியன், சிபிஎம் தெற்கு ஒன்றியசெயலாளர் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, தருமையன், கண்ணன், ஆறுமுகம், நாச்சியார் கோயில் கிளை செயலாளர் பார்த்திபன், திமுக துரை.பூபதி, இரா நெடுஞ்செழியன், உமா சங்கர், மதிமுக செழியன், ஜெகதீசன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.