தருமபுரி, ஏப்.3- தருமபுரி அருகே குடிநீர் கேட்டு இரண்டு இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரு நகர் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யவில்லை. குடிநீர் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து ஆவேசம் அடைந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலிக்குடங்களுடன் தருமபுரி-சேலம் சாலையில் அரசு கல்லூரி அருகே மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவர் அறிந்த தடங்கம் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன், தருமபுரி டிஎஸ்பி,ராஜ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் அடிப்படையில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதேபோல், தருமபுரி அருகேஉள்ள ஒட்டப்பட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதினருக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை தொடர்ந்து பற்றாக்குறை நிலவிவந்தது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்து 15 தினங்களாக தொடர்ந்து குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனையடுத்து ஆவேசம் அடைந்தபெண்கள் காலிக்குடங்களுடன்சேலம் தருமபுரி சாலையில் ஒட்டப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்தஅதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குவந்து பொதுமக்களிடம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து கலைந்து சென்றனர்.