மதுரை, பிப்.27- மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு காந்தி நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் இறந்தவரை சுமந்துகொண்டு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்லிக்கண்மாய் பகுதி மயா னத்திற்குச் செல்கின்றனர். இந்த மயானத்திற்குச் செல்ல பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போதிய சாலை வசதி இல்லாததால், விளை நிலங்களுக்கு மத்தியில் செல்லும் நிலைமை உள்ளது. இதனால் நிலத்தின் உரிமையாளர்கள் பிரச்சனை செய்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரி களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மயா னத்திற்கு சாலை வசதி, மயானத்தில் இறுதிச் சடங்கு செய் வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வலி யுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், காவல்துறை துனைக் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோனி, காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகி யோர் ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.