tamilnadu

img

மதவாத, சாதி கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் சிபிஐ டி.எம்.மூர்த்தி அறைகூவல்

தருமபுரி, ஏப்.16-மதவாத கட்சியையும், சாதிக்கட்சியையும் தூக்கிப்பிடிக்கும் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என பென்னாகரத்தில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் சிபிஐ தேசியகுழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி அரைகூவல் விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் தலைமைவகித்தார். மாவட்ட துணை செயலாளர் எம்.கோபால் வரவேற்றார். தேசியகுழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், ஜனநாயக நாடக இருக்க வேண்டுமா, பேச்சுரிமை வேண்டுமா, இயற்கை வளம் பாதுகாக்க வேண்டுமா, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமா இந்த கேள்விக்கு விடை கிடைக்க வரும் 18 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.பாஜக தேர்தல் அறிக்கையில் மோடி படம் மட்டும்தான் உள்ளது. மோடி அனைவரும் இந்தியில் தான்பேசவேண்டும் என்கிறார்.


பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க எனக்கு வாக்களிக்க வேண்டும். என்று மோடி சொல்கிறார். மத்தியஅரசு ராணுவ வீரர்களை விமானத்தில் அனுப்பாமல் லாரியில் அனுப்புகின்றனர். இதனால் எளிதாக தாக்கிவிட்டனர். இதற்கு காரணம் யார் அஜாக்கிரதையாக இருந்த மோடி அரசே, புல்வாமா தாக்குதலுக்கு மோடி, ராஜ்நாத்சிங், நிர்மலாசீத்தாராமன் பதில் சொல்ல வேண்டும்என தெரிவித்தார்.கருப்பு பணத்தை ஒழித்துவிட்டு குடிமகன் வங்கி கணக்கில் ஒருவருக்கு ரூ.15 லட்சம் வழங்குவதாக சொன்னார். இருந்த கருப்பு பணத்தைவெள்ளையாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. இந்தியாவிலேயே மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி அதிகமாக இருப்பது தமிழகத்தில் தான். மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர்களை படிக்கவிடாமல் தடுத்து நீட் தேர்வு. 1200 க்கு 1190 எடுத்த அனிதா நீட் தேர்வில் வெற்றிபெற முடிவில்லை தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களை அவமதித்தனர். அரசு பள்ளியில் படித்த 3 மாணவர்கள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர் அதிமுகதேர்தல் அறிக்கையில் நீட்தேர்வு ரத்துசெய்யப்படும் என சொல்லி இருக்கிறார்கள்.


மத்திய அமைச்சர் பியூல்கோயல் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமியை வைத்துக்கொண்டே சொல்லிவிட்டார்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டினார். அந்தமருத்துவமனையை கட்டி முடித்துவிட்டதாக அவர்கள் சாதனையாக சொல்லி வருகின்றனர். 2 கோடி பேருக்கு வேலைதருவதாக சொன்ன மோடி, ஏற்கனவே வேலை பாத்திருந்த 6 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி வரியால்நஷ்டம் ஏற்பட்டு 6 லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.மாட்டுக்கறி சாப்பிட கூடாது, எந்தஉடை உடுத்த வேண்டும் எந்த மொழிபேசவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்று பாஜக சொல்கிறது.இந்தியா முழுவதும் ஒரே மொழி பேசவேண்டும். ஒரே மாதிரியான உணவுஎன்று பாஜக சொல்கிறது. தற்போது பெண்களை ஒரு இடத்தில் சேர்த்து குத்துவிளக்கு பூஜை செய்கின்றனர். குலச்சாமியை கும்பிடமறுக்கின்றனர். சமஸ்கிருதத்தை திணிக்கின்றனர்.மொழியை, பண்பாட்டை சாமியை பறிக்கின்ற வேலையை பாஜக செய்கிறது. கடந்த தேர்தலில் மோடியாலேடியா என்றும் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சொன்னார். ஆனால் இன்று அதிமுக அமைச்சர்கள் மோடிதான் டாடி என்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு, தலைமை செயலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்தியவர்கள் என்னகிடைத்தது என்று ஊழல் விவரங்களை சொல்லவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை, மோடி அரசு தமிழகத்தில் போட்டியிட அதிமுகவை அராஜகம் செய்து மிட்டி கூட்டுவைத்துள்ளது.


ஊட்டி, குன்னூரிலும், சென்னையிலும் முத்தரப்பு தடுப்பூசி ஊசி தயாரிக்கும்  அரசு தடுப்பூசி நிறுவனம்இருந்தது. இதை மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி மூடினார். பின்னர், அன்புமணியின் மனைவி செளமியா ஒரு தனியார் கம்பெனியை திறந்தனார். ரூ.350 ஊசி விலை என உயர்த்தினார். அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, கேத்தன்தேசாய் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ தங்கம். 30 ஆயிரம் கோடி பணம் கைப்பற்றினார்கள். இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக இந்தியாவின் மருத்துவ சேர்மேன்னாக இருந்தவரை உலக மருத்துவ சேர்மனாக மாற்றியது மத்திய அரசு.திமுக தலைமையில் எல்லாபிரச்சனைகளுக்கும் போரடி கொள்கை ரீதியான கூட்டணியாக வந்தது தான் திமுக காங்கிரஸ் கூட்டணி. எனவே, பாஜக ஆட்சி வரக்கூடாது என்று சொன்னால் பாமகவுக்கு ஒரு ஓட்டுகூட வாக்களிக்கக்கூடாது. நாடாளுமன்ற தொகுதி வேட்பாள எஸ்.செந்தில்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் பேசியதாவது, பாஜகவுக்கும், பாமகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் அன்புமணி, இந்த மாவட்டத்துக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இவருக்கு வாக்களிக்கக்கூடாது. உயர்மின் கோபும், எட்டு வழிச்சாலை பிரச்சனை எதர்க்கும் போராடதவர்தான் அன்புமணி. எனவே, திமுக வேட்பாளர் எஸ்.செந்திலகுமாரை வெற்றிபெறச்செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் ந.நஞ்சப்பன் பேசியதாவது, பாமக தீயகட்சி, நாட்டுமக்களுக்கு நல்ல தல்ல, இந்த தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. ஆனால்,இன்று அதிமுகவினர் பாமகஉடன் கூட்டுவைத்துள்ளனர். நாட்டின் நலனை அடகுவைப்பது பாஜகசொல்வதை எல்லாம் செய்வது அதிமுக உங்களை தமிழக மக்கள் மன்னிப்பார்களா? பெரியார், மார்க்ஸ், அம்பேத்கார் போன்ற தலைவர்களை பயன்டுத்த தகுதிவேண்டும். இந்த தலைவர்களை பாமக பயன்படுத்த என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.


திமுக, பி.என்.பி.இன்பசேகரன்,எம்.எல்.ஏ, பேசியதாவது, ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, அதேபோல் தான் மு.க.ஸ்டாலினும் தற்போது தேர்தல் வாக்குறுதியில் நகைகடன் தள்ளுபடி, மக்கள் நலப்பணியாளர், சாலைப்பணியாளர்கள் வேலைவாய்ப்பு என பல்வேறு வாக்குறுதி அளித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணிவெற்றிபெற்றவுடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.மாதேஸ்வரன், சி.விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் காசி.தமிழ்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், வி.மாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் கருப்பண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநிலதுணைதலைவர் டி.சி.தவமணி, திராவிடர் கழக வட்ட தலைவர் ஏ.தீர்த்தகிரி, காங்கிரஸ் கட்சி வட்டத்தலைவர் முனுசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

;