tamilnadu

img

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரியால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு அ.சவுந்தரராசன் குற்றச்சாட்டு

தருமபுரி, ஏப்.7-

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரியால் சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டு தமிழகத்தில்5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன்குற்றச்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி வள்ளலார் திடலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன் வரவேற்றார். கட்சியின்மத்தியகுழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது, மோடி சொன்னதை செய்யவில்லை சொல்லாததை செய்தார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரியால் இவற்றால் 6 லட்சம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலையில்லா திண்டாட்டம் குறித்து வெளியிட ஒருதுறை இருந்தது அந்த துறையும் ஒழித்துவிட்டார்.தற்போது கடுமையான பாதிப்புவிவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.விளைகிற பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லை, உரம் விலை ஏற்றம், பொருட்கள் விலை ஏற்றம். ஆனால் விவசாய விளைபொருட்களுக்கு விலைகிடைக்காது. எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியாவில் 3.5 லட்சம் விவசாயிகள் 3 வருடத்தில் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் 7 ஆண்டுகாலத்தில் 400 பேர் தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும்விவசாய கடனைதள்ளுபடி செய்யவில்லை. ஆனால்3.5 லட்சம் கோடி ரூபாய் 300பெரும் முதலாளிகளிக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்தது.


தள்ளுபடிக்குமேல் வாங்கிய பணத்தை செலுத்தாவர்தான் மல்லையா, நீராவ் மோடி இவர் மீது எந்த நடவடிக்கை இல்லை. 30 கோடி விவசாயிகளுக்கு 80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருந்தால் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பாஜக அரசு அதைசெய்யவில்லை, முதலாளிகளை மட்டுமே பாதுகாத்தது.ரபேலில் ரூ.33 ஆயிரம் கோடி மோசடிநடந்துள்ளது. இதனைபுத்தம் வெளியிட்டால் வெளியிட தடை செய்கின்றனர்.மேலும், கருப்பு பணத்தை மீட்டு அனைத்து வாங்கி கணக்கில் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னவர் மோடி இதுவரை யாருக்கும் தரவில்லை. பண மதிப்பு நீக்கத்தாலும், ஜிஎஸ்டி வரியாலும் 50 ஆயிரம் சிறுதொழிற்சாலை மூடப்பட்டு 5 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு என்பது இந்தியா வின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நாட்டுக்கு ஆபத்து பாகிஸ்தான் இடமிருந்து இந்தியாவை பாதுகாப்பேன் என்று மோடி சொல்கிறார். பாதுகாப்பு வேலையை ராணுவம் பாதுகாக்கும். இவர் என்னால் தான் காப்பாற்றப்படும் என்று மோடி சொல்வது வாக்குக்காக அரசியல் செய்கிறார். இந்திய ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது. என்று மோடி சொல்கிறார். இந்த விஷயத்தை வெளியே சொல்லலாமா? எல்லையின் பாதுகாப்பை சொல்லலாமா? ஓட்டுக்கான அரசியல் செய்கிறார் என அவர் குற்றம் சாட்டினார்.மேலும், துணைக்கோளை சுட்டும் வீழ்த்தும் சக்தி வாய்ந்ததாக சொன்னார். இது 12 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தது. மயில்சாமி அண்ணாதுரை சொல்லிவிட்டார். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டுவருவோம் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் சேர்க்கவில்லை ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி 28 சதவிகிதம் தற்போதுகேசுக்கு, பெட்ரோலுக்கு 55 சதவிகிதம் வரி உள்ளது. அதனால் அதை சேர்க்கவில்லை. தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டம் செய்தனர்.


ஆறுதல் சொன்னாரா, அல்லது அவர் அமைச்சர்கள் சொன்னார்களா எதையும் சொல்லவில்லை விவசாயிகளை அவமதித்தனர்.தூத்துக்குடியில் வேதாந்த குழுமத்தை காப்பற்ற 15 பேரை பாஜக அரசுகொன்றது. விளைநிலங்களை அழிக்கக்கூடாது என்ற கவலை மக்களுக்கு வந்துள்ளது. பூமிக்கு அடியில் ஓயரைகொண்டு செல்ல வேண்டும். உதய்மின்திட்டம் மத்திய பாஜக அரசுகொண்டு வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்புதிட்டத்தை எதிர்த்தார். ஆனால் இந்தஇரண்டு திட்டத்தை எடப்பாடி அரசு ஏற்றுக் கொண்டது.ரேசன்கடைகளில் அரசி கிடைப்பதில்லை, பொருட்கள் ஒழுங்காக கிடைக்கவில்லை. உணவுக்கான மானியத்தை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரத்துசெய்து விடுவார்கள். ஊழல்செய்த தமிழக அரசை மிரட்டியேபாஜகவினர் தமிழகத்தின் உரிமையைகாவுவாங்கினர். நீட் தேர்வு குறித்து அரசிடம் பதில் எல்லை. நீட் என்பது ஏழைகளுக்கு எதிரானது. இந்த மத்திய மோடி ஆட்சியை, எடப்பாடி ஆட்சியைஅகற்றவேண்டும். யாரோடு கூட்டுவைக்கும் என்பதை கூட பாஜக தான்முன்வைத்து. பாமகவின் அன்புமணிமத்திய அமைச்சராக இருந்தபோது 1,500 கிலோ தங்கம் பிடிக்கப்பட்டது. கேதான்ராய் அவர்களிடம் பணம் கைப்பற்றப்பட்டது.தேர்தலுக்கு முன்வரை அதிமுகஅரசை அன்புமணி விமர்சித்தார். நேற்று வரை குடுமிபிடி சண்டைபோட்டவர்கள் இன்று உறவாடுகிறார்கள். திமுக கூட்டணி கொள்கைரிதியான கூட்டணி. ஆனால், அதிமுக பாஜக கூட்டணி சந்தர்பவாத கூட்டு. தமிழகத்தின் அதிமுக ஆட்சி சுற்றிக்கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணி11 சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பு உள்ளது. ஆனால், 18 சட்டமன்ற தொகுதிலும் வெற்றிபெறும்.நாடாளுமன்றத்தில் 33 தொகுதியில் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புசொல்கிறது.


40 தொகுதியிலும் வெற்றிபெறும் இதுதான் உண்மை. எனவே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர்எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில்வெற்றிபெற செய்யவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.இதனையடுத்து, திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ பேசியதாவது, மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய உள்ளசர்வாதிகார மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பவேண்டும். அதேபோல் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். திமுக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்து மக்கள்நலன் திட்டங்களை நிறைவேற்றினார். தமிழகத்தில்3 ஆண்டு காலத்தில் 3 முதல்வர்களை கண்டதுதான் சாதனை.தருமபுரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அமல்படுத்தினார். 60 விழுக்காடு பணிமுடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் அதனால் இந்த திட்டத்தை அதிமுக அரசு முன்னெடுக்கவில்லை. அதனால்குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.8 ஆண்டு கால ஆட்சியில் மக்கள்வேதனை அனுபவித்துள்ளனர். விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டனர். கஜாபுயலால் பாதிப்பு எதையும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.விவசாயிகளின் நலன் கருதி விவசாய கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் மக்களை ஏமாற்றும் வேலை. அன்புமணி கடந்த 5 ஆண்டுகாலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை தேர்தல் நேரத்தில் அடிக்கல் நாட்டுவதாக அரசியல் செய்கின்றனர். சிப்காட் அறிவித்து அதற்கான எந்த முயற்சியையும் அதிமுகஅரசும், அன்புமணியும் எதையும் செய்யவில்லை.எனவே மத்தியஆட்சியில் மாற்றம் மாநிலத்தில் ஆட்சிமாற்றம் என்ற அடிப்படையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும் எனகேட்டுக்கொண்டார்.


இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் கோ.வி.சிற்றரசு, மதிமுக மாவட்ட செயலாளர் அ.தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் இ.மாதன், கொமதேக ஆனந்தகுமார், தமிழக வாழ்வுரிமைகட்சி மாவட்ட செயலாளர் தவமணி, மனிநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தென்றல்(எ)யாசின், முஸ்லீம் லீக்கட்சியின் மாவட்ட செயலாளர் நிஜாமுதின், ஜஜேகே கட்சியின் மாவட்ட செயலாளர் குமார்(எ)நஞ்சப்பன், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஆ.முருகன், சிபிஎம் இடைகமிட்டி செயலாளர்கள் தருமபுரி நகரம் ஆர்.ஜோதிபாசு, தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி, கே.குப்புசாமி, இண்டூர் பி.டி.அப்புனு, பாலக்கோடு ஜி.நக்கீரன், காரிமங்கலம் பி.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;