tamilnadu

img

மாதச் சம்பளக்காரர்கள் 60 லட்சம் பேர் வேலையிழப்பு.... தொழிற்துறையில்தான் மிகமோசமான பாதிப்பு

புதுதில்லி:
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பாண்டின் மே - ஆகஸ்ட் காலத்தில், இந்தியாவில் ‘வொயிட் காலர்’ ஜாப் (White collarprofessional jobs) எனப் படும் ‘அழுக்குப்படாத வேலை கள்’ பிரிவில் 60 லட்சம் பேர்வேலையிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம், (Centre for Monitoring IndianEconomy - CMIE) தனதுநுகர்வோர் குடும்ப ஆய்வறிக்கையின் அடிப்படையில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “வொயிட் காலர்பிரிவில், 2016-ஆம் ஆண்டின்மே - ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 1 கோடியே 25 லட் சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். இது கடந்த நான்கு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து, 2019 மே - ஆகஸ்ட்காலகட்டத்தில் மொத்தம் 1 கோடியே 88 லட்சம் வொயிட்காலர் வேலைகளாக உயர்ந்திருந்தது. 

ஆனால், கொரோனா காரணமாக, 2020 மே - ஆகஸ்ட்காலத்தில், கடந்த நான்காண்டு வளர்ச்சி ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப்பட்டு, 1 கோடியே 22 லட் சம் வேலைவாய்ப்புகளாக வீழ்ச்சியடைந்துள்ளது” என்று பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித் துள்ளது.மேலும், தொழிற்துறை உற்பத்திப் பிரிவில்தான் கொரோனா பாதிப்பால் அதிகமான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது; இத்துறையில் மட்டும் 50 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர் என்றும் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்  குறிப்பிட்டுள்ளது.