tamilnadu

கொரோனா ஊரடங்கால் முடங்கிய தொழில்- ஜவுளி உரிமையாளர் தற்கொலை

ஈரோடு, ஜூலை 9- ஈரோடு அருகே கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் மனமுடைந்த ஜவுளிக் கடை உரிமை யாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தை அடுத்துள்ள மரப்பாலம் கேஏஎஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர்  சஞ்சய் மொகத்தா. இவர் இதே பகுதியில் கடந்த 15 ஆண்டு கால மாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக விற்ப னைக்கு வைத்திருந்த ஜவுளிகள் தேங்கி, தொழிலில் கடு மையான நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், வியாழனன்று டெக்ஸ்டைல்ஸில் இருந்து அதிகளவு புகை வெளியேறுவதை கண்ட அக் கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்த நிலையில், உள்ளே ஒருவர் கருகிய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சஞ்சய் மெகத்தா என்பதும், தொழில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என் றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப் பினும் இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.