tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறுக சேலத்தில் இளைஞர்-மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.28- குடியுரிமை திருத்த சட் டத்தை திரும்பப் பெற வலியு றுத்தி இளைஞர்-மாணவர் கூட்ட மைப்பினர் சனியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  குடியுரிமை திருத்தச் சட் டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு கணக் கெடுக்கும் பணியை அமல்படுத் தக் கூடாது என மத்திய, மாநில அர சுகளை வலியுறுத்தி இளைஞர்-மாணவர் கூட்டமைப்பு சார்பில் சனியன்று சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள் தேசத் தலைவர்கள் போன்று வேட மிட்டு கலந்து கொண்டனர். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜீஷ்குமார், மாவட்ட செயலா ளர் கணேசன், மாநிலக்குழு உறுப் பினர் எம்.கற்பகம், மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநில செய லாளர் என்.பிரவீன்குமார், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செயலா ளர் கவீன்ராஜ், ஏஐஒய்எப் மாநிலச் செயலாளர் பாரதி, மாவட்ட செய லாளர் ரமேஷ், ஏஐஎஸ்எப் மாவட்டச் செயலாளர் கௌதம், ஆர்ஒய்ஏ மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், பிஎஸ்பி மாவட்டச் செயலாளர் பார்த்திபன், வாழ்வு ரிமை கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலாளர் கவியரசன், இளைஞர் காங்கிரஸ் மாநகரத் தலைவர் விஜயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

;