புதுச்சேரியில் இளநிலை எழுத்தர் பதவிக்கு பணி உத்தரவு
புதுச்சேரி, செப்.19 -
இளநிலை எழுத்தர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன கடிதங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் இளநிலை எழுத்தர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வு கடந்த ஆகஸ்டில் நடைபெற்றது. அதில் தேர்வான 165 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட 19 காலி பணியிடங்களுக்கு, காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(செப்.19) நடைபெற்றது.
அதேபோல் புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கண் பார்வையற்றவர்களுக்கான ஒதுக்கப்பட்ட திறன் பெற்றிராத அலுவலக ஊழியர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட்டு தேர்வான 13 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார்,
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் கேசவன், சார்புச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனி ருந்தனர்.