tamilnadu

img

இந்தியா யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

இந்தியா யார் கட்டுப்பாட்டில் உள்ளது? 

சென்னை, மார்ச் 6 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “இந்தியா ஒரு சுதந்திர நாடு. தனது தேவைக்கான எண்ணெய்யை எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதை தானே தீர்மானித்துக்கொள்ளும் உரி மை இந்தியாவுக்கு உண்டு. ஆனால்,  ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வெறும் 30 நாட்களுக்கு மட்டும் அமெரிக்கா ‘அனுமதி’ வழங்கி யிருப்பது மிகவும் அவமானகரமான நிலை என்று கூறியுள்ளார். “ஒரு சுதந்திர நாடு தனது சொந்த ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே வேறொரு நாட்டின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டும் என்றால், அந்த நாட்டின் இறையாண்மை எங்கே போனது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய 2026 சர்வதேச கடற்படை அணி வகுப்பில் (International Fleet Review 2026) பங்கேற்ற பிறகு, ஆயு தங்கள் ஏதுமற்ற ஈரானியப் போர்க் கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டெனா’வை (IRIS Dena) அமெரிக்கா மூழ்கடித்தது கவலையளிக்கும் விஷயமாகும். ஒரு பன்னாட்டுக் கூட்டுப் பயிற்சியின் அங்க மாக இந்தியாவிற்கு வந்த ஒரு கப்ப லுக்கு இத்தகைய கதி ஏற்படும் போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், நம் நாட்டின் கண்ணியம் என்னவாகும்?  நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை என்ன வெனில்? அது எந்த  நாட்டின்  தாக்கத்திற்கும் அடிபணியாமல் சுதந்திரமாக முடிவெடுக்கும் நீண்ட கால நலன் சார்ந்த உத்தியுடன் கூடிய தன்னாட்சி தான். ஜவஹர்லால் நேரு முதல் இன்று வரை இந்தக் கொள்கை உறுதியாக பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசோ இந்த பாரம்பரி யத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. எண்ணெய் வாங்குவதற்கும் அமெரிக்காவிடம் அனுமதி கேட்கும் நிலை, கடற்படை விழாவில் வந்த நட்பு நாட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டும் மவுனமாக இருக்கும் நிலை இவை எல்லாம் இந்தியாவின் தலைநிமிர்ந்த நிலைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும். சர்வதேச அரங்கில் இந்தியா எப்போதும் தலை நிமிர்ந்து நின்றது. அந்த கண்ணியம் மீண்டும் நிலை நாட்டப்பட வேண்டும். நாட்டின் இறை யாண்மையும் மக்களின் நலனும் எந்த சக்தியின் அழுத்தத்திற்கும் அடிபணி யாமல் உறுதியாக பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.