கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடலூர், அக்.8- கடலூர் ஊராட்சி ஒன்றியம் பெரியகங்கணாகுப்பம் ஊராட்சியில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றின் வடக்கு பகுதியில் மண்ணாலான கரையை பலப்படுத்தும் பணிக்காக கிராமக்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் அம்மக்களுக்கு இதுநாள் வரையும் மனை பட்டா அல்லது மனையும் வழங்க வில்லை. அப்புறப்படுத்திய மக்கள் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதால் மிகவும் சிரமத்துக்குளாகி வரு கின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து புதன்கிழமை பெரியகங்கணாங்குப்பம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெய சம்பத், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் துரை, மாறன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மாற்று இடம், மனைப்பட்டா வழங்கும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரி வித்துள்ளனர்.
