tamilnadu

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுக வேலூர் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுக

வேலூர் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

வேலூர், ஆக 3 - வேலூர் மாவட்டம், காட்பாடி பி.டி.எம் மஹாலில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் 38வது பொதுமாநாடு கோட்ட தலைவர் பி.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்து பேசினார். கோட்ட பொதுச்செயலாளர் எஸ்.பழனி ராஜ் வேலைஅறிக்கையையும், பொரு ளாளர் சி.கணேசன் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர். கோட்ட இணைச்செயலாளர் வேலா யுதம் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா நிறைவுறையாற்றினார். முடி வில் கோட்ட துணைத்தலைவர் எஸ்.குணாளன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு கோட்டத் தலைவராக பி.எஸ்.பாலாஜி, செயலாளராக எஸ்.பழனிராஜ், பொருளாளராக சி.கணேசன் உள்ளிட்ட 17பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை விற்பனை செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் இன்ஷூரன்ஸ் துறை யில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடாக உயர்த்தப்படுவதை திரும்ப பெற வேண்டும். எல்ஐசி நிறுவனத்தில் மூன்றாம், நான்காம் பிரிவு பணிகளில் பணி நியமனம் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை அகற்ற வேண்டும். நான்கு தொகுப்புகளாக சுருக்கப்பட்ட தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும்.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளித்தந்தும், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்  நவீன தாராளமயமாக்க கொள்கைகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முன்னதாக, காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் பொன்னாடை போர்த்தி கவுர விக்கப்பட்டனர்.