tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக காஞ்சிபுரத்தில் காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக   காஞ்சிபுரத்தில் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், ஆக.20- அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காஞ்சிபுரம் பேருந்து பணிமனை முன்பு மூன்றாம் நாளாக புதனன்று (ஆக.20) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 3,500 தொழி லாளர்களுக்கு மறுக்கப் பட்டு வரும் ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த வர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; 94 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஓய்வூதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில், பேருந்து பணிமனை முன்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மாயக்கண்ணன் தலை மையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்ட த்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன  மாநில இணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனி வாசன், பொருளாளர் ஜி.கமலக்கண்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர்கள் என்.நந்த கோபால், டி.ரவி ஆகியோர் பேசினர். அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஓய்.சீதா ராமன், விதொச காஞ்சி புரம் மாவட்ட அமைப்பா ளர் சி.சங்கர், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மின்திட்ட கிளை தலைவர் ஆர்.மதியழகன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.