கொரோனா நோய் தொற்றால் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதத்தை பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.
நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,