tamilnadu

img

நாட்டிலேயே முதன்முறையாக டயாலிசிஸ் வசதியுடன் முதியோர் ஆதரவு மையம்

நாட்டிலேயே முதன்முறையாக டயாலிசிஸ் வசதியுடன்  முதியோர் ஆதரவு மையம்

சென்னை, ஆக.18- முதியோர் பராமரிப்பு சேவையில் முன்னணியில் உள்ள  ஜெரி கேர், சென்னை வேளச்சேரியில் தனது புதிய மையத்தைத் திறந்துள்ளது.  இது இந்நிறுவனத்தின் 10 ஆவது கிளையாகும்.  புதிய கிளையில் 75 படுக்கைகள் உள்ளன. முதியோருக்குத் தேவை யான வல்லுநர்களின் துணைகொண்ட மருத்துவ வசதி அதாவது  அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, நாள்பட்ட நோயாளிகளுக்கான பராமரிப்பு நிர்வாகம், டிமென்ஷியா நிலையில் இருப்போருக்கான பராமரிப்பு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியோருக்கான பரா மரிப்பு ஆகியவற்றை அதிநவீன வசதிகளுடன் இம்மை யத்தில் பெறலாம்.  இங்கு முதியோருக்கான டயாலிசிஸ் வசதி நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  பின்னிரவு நேரத்தில்கூட  சிகிச்சை தேவைப்படும் குடும்பங்களின் சுமையை இது குறைக்கும். இம்மையத்தில் முதியோருக் கான உடற்பயிற்சி மையம் (பிசியோதெரபி மற்றும் மறு வாழ்வு சிகிச்சைப் பயிற்சி தேவைப்படுவோருக்காக) செயல்படுகிறது. இம்மையத்தை தேசிய விருதுபெற்ற நடிகையும் புகழ்பெற்ற இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் திறந்து வைத்தார். மூத்த குடிமக்களுக்கான சுகாதார சேவையின் முன்னோடி மருத்துவர்.வி.எஸ். நடராஜன், ஜெரி கேர் நிர்வாக இயக்குநர் மருத்துவர் லட்சுமிபதி ரமேஷ் உள்ளிட்டோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.