tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது

சென்னை, ஆக. 20 - சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், கபடி, சிலம்பம் உட்பட 15 விளை யாட்டுகளில், பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி கள் பங்கேற்கும் வகையிலான ‘முத லமைச்சர் கோப்பை’ என்ற விளை யாட்டுப் போட்டியை அறிவித்தார். 

அதன்படி கடந்த ஆண்டு அனை த்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவி லான விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன. இதில், சென்னை, செங்கல் பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங் கள் முதல் 3 இடங்களைப் பிடித்தன.

இந்த சூழலில் இந்த ஆண்டிற்கான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகள் அறிவிக்கப்பட்டு, (online registration)  https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 4 முதல் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கடைசி நாள் ஆக.25. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போ ட்டிகள் செப். 10 அன்று துவங்குகிறது.

மாணவர்கள் தாங்களாகவே, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல்  சரிபார்ப்புப் பணி!  இன்று துவங்குகிறது

சென்னை, ஆக. 20 - தமிழகம் முழுவதும் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 18 வரை நடைபெறுகிறது.

இதில், வாக்காளர் பட்டியல் சரிபார்த் தல், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்கா ளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடை யாள அட்டை இடையிலான முரண்பாடு களை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து நவம்பர் 28 வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கெனனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பதிவுகளை நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இட மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண் ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24-ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

கால்நடைப் பராமரிப்பு: நடமாடும் வாகனங்கள் சேவை துவக்கம்!

சென்னை, ஆக. 20- சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செவ் வாயன்று (ஆக.20) நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 நடமாடும் வாகனங்கள் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தொடங்கி வைத்தார். இதனை தொட ர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் மூலம், கருவூலக் கணக்குத் துறைக்கு தேர்வாகி உள்ளவர்களுக்கும், பணிக்காலத்தில் இறந்த பணியாளர் களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.