தொலைத்தொடர்புத்துறை ஊழியர் சங்கத்தின் முன்னோடித்தலைவரும், தீக்கதிர் துணை ஆசிரியராக பணியாற்றியவருமான தோழர் ஏ.கே.வீரராகவனின் இணையர் ஏ.கே.வி.சகுந்தலா படத்திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று (ஆக.21) புழுதிவாக்கத்தில் உள்ள ஏ.கே.வி இல்லத்தில் நடைபெற்றது. படத்தை மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு திறந்து வைத்தார். மூத்த தோழர் சி.கே நரசிம்மன் தலைமை தாங்கினார். வருமான வரித்துறை ஊழியர் சங்க அகில இந்திய தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன், ஓய்வுபெற்றோர் சங்க மாநிலத்தலைவர் சுந்தரமூர்த்தி, கோவிந்தராஜன், ஆர்.குணசேகரன், முத்து (பிஎஸ்என்எல்), சின்ராஜ்(என்எப்பிடிஇ), ஏழுமலை (எப்என்டிஓ) உள்ளிட்ட பலர் அம்மையார் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.