tamilnadu

img

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மவுன புரட்சி இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டத் தலைவர் கே.கணபதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மா.மகாதேவன், கோட்ட செயலாளர் ஏ.ஏழுமலை, பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் பி.விஜயன், ஆதரவு சங்க நிர்வாகிகள் ஜெ.ராஜா, எஸ்.பார்த்திபன், த.ரவி, டி.பி.புனிதா உள்ளிட்டோர் உரையாற்றினர்.