அரசின் வருவாய்த்துறை பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் முறை புகுத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில முழுவதும் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூரில் மாவட்டத்தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 5 வட்டங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தலைவர் பி.சந்திரன், பொருளாளர் நந்தகுமார், வருவாய் துறை அலுவலக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.