திருப்பத்தூர்,பிப்.21 - திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, கந்திலி,திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயி ரக்கணக்கான ஏக்கரில், வாணியம்பாடி, ஆம்பூர் வட்டங்களில் ஓரிரு இடங்க ளில் நெல் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் விளை விக்கப்படும் நெல் மூட்டை கள் அந்தந்த வட்டங்க ளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வரு கின்றனர். அங்கு நெல்லுக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சில நேரங்களில் பணமும் கால தாமதமாக வழங்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தின் எந்த வட்டங்களிலும் ஒரு கொள்முதல் நிலையம் கூட இல்லாத சூழ்நிலை நிலவு கிறது. இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் க.சிவசெளந்தர வல்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்கு வட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக திருப்பத்தூர், கந்திலி பகுதிகளில் பின் படிப்படியாக அனைத்து வட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும் என கூறி யுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சி யர் வேளாண் துறை அதி காரிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு தெரி விப்பதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் கூறி னார். இச்சந்திப்பின்போது விவசாயிகள் சங்க மாவட்ட துணை செய லாளர் எஸ்.காமராஜர், தாலுகா நிர்வாகிகள் பி.கரிசித்தன் ஆர்.பர்வதம், கே.தேவேந்திரன், ஜி.பெருமாள் சாமி, ஜி வீரமணி, வி.சிங்காரம் உடனிருந்தனர்.