tamilnadu

img

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டிடங்களைஅகற்ற கோரிக்கை

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டிடங்களைஅகற்ற கோரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.9 – ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் டி.பரந்தூரில் முகலூர் திரும்பும் இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.  50 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த பள்ளியில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். மொழி வழி கல்வி, நிர்வாக கோளாறு கள் குறித்த நடவடிக்கைகள் காரணமாக மாணவர்கள் வருகை கடுமையாக குறைந்து தற்போது சுமார் 250 மாண வர்களே படித்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இப்பள்ளியில் முகலூர் சாலை பக்கம் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து பல ஆண்டுகளாக கட்டப்படாமலே உள்ளது. இதனால் பள்ளி இல்லா நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், இரவு நேரத்திலும் பலரும் பள்ளி வளா கத்திற்குள் நடமாடுவதாகவும், பழைய வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் பழுதுபட்டு இடிந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த பாழடைந்த கட்டி டங்கள் அகற்றப்படாமலும் உள்ளது. இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் முழு நீளத்திற்கும் கட்ட வேண்டும், பழுதுபட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும், மாணவர்களுக்கான கழிப்பறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும், மாவட்ட கல்வி அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.