பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
புதுச்சேரி, அக்.9– பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மூடி மறைக்கும் புதுச்சேரி பல் கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வியாழக்கிழமை(அக்.9) மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். புதுச்சேரி காலாப்பட்டி யில் உள்ளது மத்திய பல்கலைக்கழகம். இங்கு தொடர்ச்சியாக மாணவி கள் மீது பாலியல் வல்லு றவு சம்பவங்கள் நடை பெற்று வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சிறைவைப்பு சமீபத்தில், காரைக் காலில் இயங்கும் புதுச்சேரி பல்கலைக்கழக கிளையில் வளாக தலைவர் மாதவைய்யா மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு கள் எழுந்தன. இதேபோல் மேலும் சில பேராசிரியர்க ளும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு ஆளாகி யுள்ளனர். எனவே, குற்றச் சாட்டுக்கு உள்ளான காரைக் கால் பல்கலைக்கழக தலைவர் மாதவைய்யா மற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு 2015 ஆம் ஆண்டு விதிகள் படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் துணை வேந்தர் பிரகாஷ் பாபு அலுவலகத்தை வியாழக் கிழமை(அக்.9) முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் துணை வேந்தர் பிரகாஷ் பாபு பல்கலைக்கழக அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டார். மாண வர்களின் போராட்டத்தால் மத்திய பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
