tamilnadu

img

வரைப்பேட்டை பஜார் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேக்கம்

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளது. சனிக்கிழமையன்று (ஆக 30), இரவு பெய்த மழையால் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.  சர்வீஸ் சாலையில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டுள்ளது. இதனை சரி செய்யவேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர்  தானாக உருண்டோடும் வகையில் கால்வாய்  வடிவமைக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.