tamilnadu

பழங்குடி இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பழங்குடி இருளர் இன மக்களுக்கு   குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், ஜூலை 3-  மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நீண்ட கால மாக வசித்து வரும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் மது ராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை (ஜுலை 3)   போராட்டம்  நடைபெற்றது.    மதுராந்தகம் வட்டம், பழையனூர் கிராமம் பழங்குடி இருளர் மக்களுக்கு பட்டா வழங்கி அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு எதிராக தடை யாணை  பெற்றதை நீக்கிட விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும், மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட செய்யூர் மதுராந்தகம் வட்டத் திற்குட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வரும் 250-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கி (ஜன்மன்) திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், படாளம் கூட்ரோட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் நரிக்குறவர் மக்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா அரசு தொகுப்பு வீடு வழங்க வேண்டும், மதுராந்தகம் வட்டம், ஊனமலை கிராமத்தில் வாழ்ந்து வரும் இருளர் மக்களுக்கு ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று உள்ளிட்ட அடிப்படை அத்தாட்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வழங்கியுள்ள உத்த ரவு  அடிப்படையில், மதுராந்தகம் வட்டம், பூதூர் கிராமத்தில் 5 தலை முறை காலமாக பழங்குடி இருளர் மக்கள் பயிர்செய்துவரும் அனுபவ நிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் நிலப்பட்டா உடனே வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், மதுராந்தகம் வட்டம், அருங்குணம், வீராணக்கண்ணம், காவாதூர், ஜமீன் எண்டத்தூர், சாத்தமை, புதுபட்டு, மேலவலம்பேட்டை, வேடவாக்கம். மதூர். தொழுப்பேடு, கன்னிக்கோயில் மேடு, அச்சரப்பாக்கம், புலிப்புரக் கோயில், எல்.என்.புரம், சிறுகனதூர், செய்யூர், செங்காட்டுர், இல்லீடு, சித்தா மூர் வால்காடு உள்ளிட்ட கிராம பழங்குடி இல்லர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது  சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அழகேசன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில்  மாவட்டச் செய லாளர் சி,பன்னீர், பொருளாளர் என். சுப்பிரமணி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரி கிருஷ் ணன்,  செயலாளர் வாசுதேவன்,  துணைத் தலைவர் ஜி.மோகன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலா மணி உள்ளிட்ட பலர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் பேசினார்.  முன்னதாக மதுரா ந்தகம் பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று மது ராந்தகம் கோட்டாட்சியரை சந்தித்து சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.