tamilnadu

img

கடற்கரை மண்டல மேலாண்மை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடற்கரை மண்டல மேலாண்மை  அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 25-  மீனவர்களுக்கு எதிரான கடற்கரை மண்டல மேலாண்மை சட்ட வரைவு அறிக்கையை கண்டித்து புதுச்சேரியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால்  கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தில் பதிவு செய்யப்படாமல் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்ட  மீனவர் கிராமங்களின் பொது சொத்துகளை உடனடியாக வரைவுத் திட்டத்தில் புதுச்சேரி அரசு பதிவு செய்யவேண்டும். கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில், இணைப்பு - 4ல் பிரிவு 5.3ல் சொல்லியுள்ளதைப் போல, மீனவர்களின் நீண்ட கால குடியிருப்புத் தேவைகள் சார்ந்த விரிவான திட்டங்களை தயார் செய்து வெளியிடக்கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயலாளர் எஸ் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். திமுக மாநில அமைப்பாளர் எதிர்க்கட்சித் தலை வர்  சிவா, எம்.எல்.ஏ., காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், சிபிஐஎம்எல் கட்சியின் மாநில நிர்வாகி புருஷோத்தமன் மற்றும் மீனவர் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.