tamilnadu

img

100 நாள் வேலை வழங்கக் கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை வழங்கக் கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.9 – கிராமப்புற வேலை உறுதி திட்ட அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கக் வலியுறுத்தி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மனு கொடுத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்ருட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சமுதாயக்கூடம், சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி தருதல், எரி கொட்டகை, ஈமகாரிய மண்டபம் போன்றவற்றை கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டத் தலைவர் காசி, லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், மோகன்ராஜ், நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சங்க மாவட்டப் பொருளாளர் டி.கிருஷ்ணன், வட்டச் செயலாளர் பன்னீர், பொருளாளர் கொளஞ்சியப்பன், ஆர்.லோகநாதன், வட்டச் செயலாளர் எம்.சரவணன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். பின்னர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.