செப்.23இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
சேலம், செப்.9- பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, செப்.23 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாலைத் தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம், சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொரோனா காலத்தில் மூடப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள என்டிசி ஆலைகளை ஒன்றிய அரசு உடனடியாக திறக்க வேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் 20 ஆண்டுகளாக தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வில்லை. தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருபவர்களை, ஒப்பந்த முறைக்குமாற கட்டாயப்படுத்துவது சரியில்லை. தமிழக அரசு நடத்தி வருகின்ற6 கூட்டுறவு நூற்பாலைகளில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 300க்கும் குறைவு. எனவே, இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டப்படி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக தொழிலாளர் களுக்கு ஆதரவான தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வது; தடைபெறுவது கூடாது. பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டிற்குரிய போனஸ் 20 சதவிகிதம் கூடுதலாக, ஊக்கத் தொகை பத்து சதவிகிதம் வழங்க வேண்டும். அரசாணைப்படி, பஞ்சாலைகளில் பணி புரியும் பயிற்சியாளர் களுக்கு தினசரி குறைந்தபட்ச ஊதிய மாக ரூ.552 வழங்க வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு மாநில அளவிலான குறைந்தபட்ச கூலியை தீர்மானிப்பதற்காக குழுவை அமைத்து, குழுவின் அறிக்கையை பெற்று மேலும் காலதாமதம் இல்லாமல் குறைந்தபட்ச கூலி அரசாணை வெளியிட வேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதில் வஞ்சனை கூடாது. அரசு அறிவிக்கின்ற சத விகித போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் செப்.23 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.