tamilnadu

img

வீடுகள் கட்டி முடிக்க தவறிய அதிகாரிகள்: மழையால் இருளர் மக்கள் மீண்டும் பாதிப்பு

வீடுகள் கட்டி முடிக்க தவறிய அதிகாரிகள்: மழையால் இருளர் மக்கள் மீண்டும் பாதிப்பு

திருவள்ளூர், அக்.23- திருத்தணி வட்டம் இலுப்பூர் ஊராட்சி யில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை களில் வாழும் 24 பழங்குடி இருளர் இன மக்கள், அதிகாரிகள் அலட்சியத்தால் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் மீண்டும் வடகிழக்கு பருவமழை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்தைத் தொடர்ந்து 2024ல் துணை முதல்வர் கையால் தொழு தாவூர் ஊராட்சி மருதவல்லிபுரத்தில் குடி மனை பட்டா வழங்கப்பட்டது. பிரதமர் ஜென்மன் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை பெறப்பட்டது. ஆனால் அந்த இடம் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளதாகவும் வழங்கிய பட்டாக்கள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் வந்துள்ளது. தற்போது மருதவல்லிபுரத்தில் 14 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மேல்தளம் கான்கிரீட் போடப்பட்டு பாதியில் நிற்கிறது. மீதமுள்ள 20 தொகுப்பு வீடுகளும் கட்ட முடியாமல் உள்ளது. அரசு நிலத்திற்கு தனிநபர் நீதிமன்றத்தில் தடை வாங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசு பேசுகையில், நீதிமன்ற வழக்கு முடியும் வரை அல்லது மாற்று இடத்தில் பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கும் வரை 24 குடும்பங்களையும் மாவட்ட நிர்வாகம் வாடகை வீடுகளில் தங்க வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீதி மன்றத்தில் உரிய நேரத்தில் மனு தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.