tamilnadu

img

கிழக்கு கடற்கரை சாலையில் புதிய குடியிருப்பு திட்டம்

கிழக்கு கடற்கரை சாலையில் புதிய குடியிருப்பு திட்டம்  '

சென்னை, ஜுலை 10- 2030-ம் ஆண்டில் தனது பொன்விழாவை நோக்கி முன்னேறும், சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான ராஜ்பாரிஸ், புதுப்பிக்கப்பட்ட பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர்) ப்ளூ ஜுவெல் என்ற பெயரில் நவீன வசதிகள் கொண்ட புதிய குடியிருப்பு திட்டத்தை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தெரிவித்துள்ள   ராஜ்பாரீஸ் நிறுவனர்களான அதன் தலைவர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர். ஜெயக்குமார்,   கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைதி தவழும் சூழலில், இந்தபுதிய குடியிருப்பு திட்டம் அமைய உள்ளது என்றனர். 55 குடும்பங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்படும் இத்திட்டத்தில், ஒவ்வொன்றும் 2200 சதுரஅடி பரப்பளவிலான  3 படுக்கை அறை இல்லங்கள் இடம்பெறுகின்றன.  வங்காள விரிகுடா, முட்டுக்காடு ஏரி மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பக்கிங்ஹாம் கால்வாய் என மூன்று அழகான நீர்நிலைகளை கண்டு ரசிக்கும் விதத்தில் உருவாகும் இத்திட்டமானது, சென்னையின் மிகச்சிறப்பான வாழ்விட அனுபவங்களுள் ஒன்றாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.