tamilnadu

img

செரப்பணஞ்சேரியில் புதிய மின் அலுவலகம்

செரப்பணஞ்சேரியில் புதிய மின் அலுவலகம்

காஞ்சிபுரம், அக். 3- காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட, நாவலூர் பிரிவு அலுவலகத்திற்கு, செரப்பணஞ்சேரியில் புதிதாக மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.  மறைமலை நகர் மின் கோட்டத்தின் கீழ், படப்பை மின் உதவி பொறியாளர் அலு வலகம் செயல்பட்டு வருகிறது. இதில், செரப்பனஞ்சேரி, நாவலூர், வஞ்சு வாஞ்சேரி ஆகிய பகுதிகளில் புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் ஏற்படும் மின் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அதேபோல், இப்பகுதி மக்கள் 10 கி.மீ. தூரம் கரசங்கால் பகுதியில் அமைந்துள்ள படப்பை மின் உதவி பொறியாளர் அலு வலகத்திற்கு சென்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, படப்பை மின் உதவி பொறியாளர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து, நாவலூர் மின் உதவி பொறியாளர் அலுவலகம் புதிதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டு, படப்பையை அடுத்த செரப்பணஞ்சேரியில் நாவலூர் மின் உதவி பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த புதிய அலுவலகத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன் திறந்து வைத்தார். இதில் செங்கல்பட்டு மின் மேற்பார்வை பொறியாளர் அன்பு செல்வன், செயற்பொறியாளர் மாணிக்க வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கணினி மற்றும் இன்டர்நெட் இணைப்பு பணிகள் மீதமுள்ள நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து அலுவலகம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன் பங்கேற்று, புதிய உதவி பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில், செங்கல்பட்டு மின் மேற்பார்வை பொறியாளர் அன்பு செல்வன், செயற்பொறியாளர் மாணிக்க வேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.