tamilnadu

img

சேறும் சகதியுமாய் காட்சியளிக்கும் போக்குவரத்து பணிமனை நுழைவாயில் உளுந்தூர்பேட்டையில் தார் சாலை அமைக்க கோரிக்கை

சேறும் சகதியுமாய் காட்சியளிக்கும் போக்குவரத்து பணிமனை நுழைவாயில்  உளுந்தூர்பேட்டையில் தார் சாலை அமைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி, அக். 6-  தற்போது பெய்த மழையில், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் உளுந்தூர்பேட்டை கிளையின் பணிமனை நுழைவாயிலில் ஒரு வாரமாக சேறு சகதியுடன் காட்சியளிக்கிறது. நடத்துநர் கள், ஓட்டுநர்கள், பணிமனை ஊழியர்கள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்குச் செல்லக் கூடிய அரசு பேருந்துகள் இந்த பணிமனை யில் இருந்துதான் செல்கின்றன. குறிப்பாக மழைக்காலம் வந்துவிட்டால் இந்த பணிமனை முழுக்க சேறு சகதியுடனும் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை நீடித்துக் கொண்டுள்ளது. மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாகமோ, உளுந்தூர்பேட்டை பணிமனை நிர்வாகமோ இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய ஓட்டு நர்கள் மற்றும் நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என பணிபுரிந்து வரும் அனைவருக்கும் மிகச் சிரமமாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் அரசு உடனே கவனத்தில் கொண்டு இப்பணிமனைக்கு நுழைவாயிலில் இருந்து பணிமனை முக்கிய இடங்கள் வரை தார் சாலை அல்லது சிமெண்ட் தளம் அமைத்துத் தர வேண்டும் என்பது இங்கு பணிபுரிபவர் களின் கோரிக்கையாக உள்ளது.