மெட்ரோ ரயில் : பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு
சென்னை, ஆக.26- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றி தழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறை வடைந்தன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்த டங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறு வதற்கான சோதனைகளை நிறைவு செய்து ள்ளது. இந்தச் சோதனைகள் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறு வதற்குப் பின்பற்றப்படும் நடை முறைக ளின்படி, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட் டது. ஆகஸ்ட் 16 அன்று தொடங்கிய இந்த சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணிப்பது பயணி களுக்கு எவ்வளவு வசதியானது என்பதை அறிய, மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப் பட்டது. மேலும் மின்சாரம், காற்றழுத்தம் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத் தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், பிரேக் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ரயில் கட்டுமானமும் பயணிகளுக்கு பாதுகாப் பான பயணத்தை வழங்குகிறதா என்பதை அறிக்கை சரிபார்க்கிறது. மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக் கும்போது, அதன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இந்த வெற்றிகரமான சோதனைகள் நிரூபிக்கின் றன. மேலும், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந் துள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தர நிலை களை பின்பற்றியுள்ளது என்பதை நிரூ பிக்கிறது.