tamilnadu

குறைந்த மருத்துவக் கட்டணம்: தமிழகம் முதலிடம்...

புதுதில்லி'
இந்தியாவில் மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான புதிய புள்ளி விவரங்களை ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைக்கு சராசரியாக ரூ.433 முதல் ரூ.520 வரை செலவாகிறது என்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூ.28,412 முதல் ரூ.41,566 வரை செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;