விக்கிரவாண்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் நடந்த வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலையை கண்டித்து விக்கிரவாண்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.சங்கரன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் கார்த்திக், பிரகாஷ், ராஜபாண்டி, எழிலரசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.