tamilnadu

காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை பேரவை வலியுறுத்தல்

காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்  காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை பேரவை வலியுறுத்தல்

காஞ்சிபுரம், செப்.8- மின்சார வாரியத்தில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை 14-வது ஆண்டு பேரவை வலியுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டக்கிளை ஆண்டு பேரவை கூட்டம் ஞாயிறன்று (செப் 7) காஞ்சிபுரத்தில் தோழர் என்.சங்கரய்யா நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. அமைப்பின் காஞ்சிபுரம் திட்ட தலைவர் ஆர்.மதியழகன்  தலைமை தாங்கினார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக் க்குமார் பேரவையை துவக்கி வைத்துப் பேசினார்.  முன்னதாக திட்ட செயலாளர் செய லாளர் ஆர்.பாபு வரவேற்றார், துணைத் தலை வர் எஸ்.பூபாலன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். திட்ட செயலாளர் ஜி.படவேட் டான் வேலை அறிக்கையையும், பொருளா ளர் பி.கேசவன் வரவு-செலவு அறிக்கையை யும் சமர்பித்தார். மத்திய அமைப்பின்  மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார். வடக்கு கோட்ட இணை செயலாளர் நிர்வாகி டி.ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். தீர்மானங்கள் ஒப்பந்த ஊழியர்களையும், பகுதி நேர பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங் களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட த்தில் இருந்து பிரிந்து சென்ற திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள  திருத்தணி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் ஆகிய கோட்டம் தனித்தனியே முன்னுரிமை பட்டி யல் வழங்கி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு சிறப்புத் தலைவராக டி.ஸ்ரீதர்,  திட்டத் தலைவராக பி.கேசவன், செயலாளராக ஜி.படவேட்டான், பொருளாளராக ஆர்.மதிய ழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.