கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி ஆய்வு
கள்ளக்குறிச்சி, ஆக. 21- கள்ளக்குறிச்சி நகராட்சி புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டு மானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆக.21 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலை ஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் ஜூன் 28 அன்று பொது பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் நிறுத்தும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. உட்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கடைகள், நேரக்காப்பாளர் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகள், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.