கள்ளக்குறிச்சி மாவட்ட மைய நூலக பணிகள் துவக்கம்
கள்ளக்குறிச்சி, செப்.26- கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலக கட்டிடப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (செப்.26) காணொலி காட்சி மூலமாக, தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் பொதுப்பணி துறையின் சார்பாக ரூ.4.1 கோடி மதிப்பீட்டில் 1335 சதுர பரப்பளவில் 4 தளம் கொண்ட மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலக புதிய கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி குழு தலை வர் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார், நகராட்சி ஆணை யர் சரவணன், மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன், நூலக ஆய்வாளர் சங்கரன், மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வாணியந்தல் ஆறு முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி. முருகன், தியாகதுருகம் ஒன்றிய பெருந்த தலைவர் தாமோதரன், ஒன்றிய குழுத் துணைத் தலைவர் சத்யா முருகன், நகர துணைச் செயலாளர் அப்துல் ரசாக், நகர அவைத் தலைவர் அப்துல் கலீல் மற்றும் மனோஜ் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், நூலகப் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.