காலனி தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை
கள்ளக்குறிச்சி சிஐடியு மாநாடு கோரிக்கை
கள்ளக்குறிச்சி,செப். 29- உளுந்தூர்பேட்டையில் உருவாகும் தோல் இல்லாத காலனி தொழிற்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்ட 4-வது மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இம்மாநாட்டையொட்டி, மணிக்கூண்டு திடலில் இருந்து புறப்பட்ட செம்படை ஊர்வலம் மாநாட்டுத் திடலை வந்த டைந்தது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் கொடியசைத்து துவங்கி வைத்தார். பின்னர், மின்னரங்கு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜாமணி செங்கொடியை ஏற்றி வைத்தார். பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமை வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் வி.சாமிநாதன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கே.சீனிவாசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் எம்.செந்தில் வேலை அறிக்கையும், பொருளாளர் ஏ.வீராசாமி வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன் நிறைவுறை யாற்றினார். வரவேற்பு குழு தலைவர் எம்.ராஜேந்திரன் நன்றி கூறினார். தீர்மானம் உளுந்தூர்பேட்டை, ஆசனூர் சிப்காட் வளா கத்தில் புதிய தொழிற் சாலை துவங்க வேண்டும், அனைத்து நிறுவனங்களி லும் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப் படுத்தவும், காண்ட்ராக்ட் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தி டவும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும், தொழிலாளர் நல வாரிய பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும், சிறு குறு தொழில்களை பாது காக்க ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளராக எம்.செந்தில், பொருளாளராக கே.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டனர்.
