tamilnadu

ஜெ. நினைவு மண்டபம் கட்ட தடையில்லை: நீதிமன்றம்

சென்னை, ஏப்.22- சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கைவிசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என கூறி மனுவைதள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பிரச்சனையில், தங்களால் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.