tamilnadu

img

இந்தியன் வங்கி ரூ.1616.14 கோடி ஈவுத்தொகை காசோலையை ஒன்றிய அரசுக்கு வழங்கியது

இந்தியன் வங்கி ரூ.1616.14 கோடி ஈவுத்தொகை காசோலையை ஒன்றிய  அரசுக்கு வழங்கியது

சென்னை, ஜூலை 8 இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ பினோத் குமார், 2024-25 நிதியாண்டிற்கான ரூ.1616.14 கோடி ஈவுத்தொகைக்கான காசோலையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார். அப்போது  நிதி சேவைகள் துறை செயலாளர் எம். நாகராஜு, வங்கியின் கூடுதல் செயலாளர் மற்றும் அரசு நியமன இயக்குநர் டாக்டர். அலோக் பாண்டே மற்றும் நிதி சேவைகள் துறை இணைச் செயலாளர் ஆஷிஷ் மதோராவ் மோர் ஆகியோர் உடனிருந்தனர். நிர்வாக இயக்குநர் அசுதோஷ் சவுத்ரி மற்றும் வங்கியின் தலைமை நிதி அதிகாரி சுனில் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர். 2024-25 நிதியாண்டில், இந்தியன் வங்கி ஒரு பங்கிற்கு ரூ.16.25 ஈவுத்தொகையை அறிவித்தது. இது அதன் வலுவான நிதி செயல்திறனை பிரதிபலிக்கிறது என்று வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.